யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் நேற்றிரவு இரவு சுமார் 70 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருட்ப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலங்காடு வேம்படி அம்மன் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில்
வீட்டின் உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைபாடு செய்துள்ளார்.எதிர்வரும் 15 ஆம் திகதி திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டுள்ளன.
வீட்டின் ஒருபகுதி தோட்ட வெளி நிறைந்த பகுதியாகவும், வீட்டின் சுவர்களில் மண்பதித்த கால் அடையாளங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.உறக்கத்தில் இருந்தவர்கள் மீது மயக்க மருந்து விசிறி நகைகள் திருடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.






