மாத்தளையில் கையும்களவுமாக சிக்கிய வெளிநாட்டு பிரஜை

10 வருடங்கள் விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த ஈரான் நாட்டு பிரஜையொருவர் மாத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் , அளுத்கம தர்கா நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பேர் இரண்டு உந்துருளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.