மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாந்தை சந்தியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அடம்பன் பாலப்பகுதியில் காணப்பட்ட மர்மப் பொதியில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றை படையினர் இன்று வியாழக்கிழமை காலை மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான மர்மப் பொதி ஒன்று காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அடம்பன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
விரைந்து செயற்பட்ட அடம்பன் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரையும் அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தியதோடு, குறித்த மர்மப் பொதியையும் சோதனை செய்தனர்.
இதன் போது பிளாஸ்ரிக் போத்தலில் கிறீஸ் நிறப்பப்பட்டு அதனுல் கைத்துப்பாக்கி வைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக குறித்த கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதோடு, குறித்த துப்பாக்கி ஜப்பான் நாட்டு தயாரிப்பு என படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
மேலதிக விசாரனைகளை மன்னார் மற்றும் அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






