இலங்கை குண்டுதாக்குதல்களின் எதிரொலி! சஹரானின் மைத்துனர் வெளிநாடு ஒன்றில் கைது

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரியதாரியாக கருதப்படும் சஹரான் ஹாசீமின் மைத்துனர் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சவூதி அரேபியாவில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் புலனாய்வு தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர்கள் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மாற்று பெயர்களில் இவ்வாறு சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பயங்கரவாத தாக்குதலுக்கு தாமே காரணம் என ஐ.எஸ் அமைப்பு பொருப்பேற்றுள்ள நிலையில், இந்தியாவிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.