கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு! பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

கொழும்பின் எல்லைக்குட்பட்ட வான் பரப்பில் பறந்த ட்ரோன் கமராவினால் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – ஜாவத்தை பிரதேசத்தின் வானில் அனுமதியின்றி பறந்த ட்ரோன் கமராவுக்கு பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ட்ரோன் கமரா வானில் பறப்பதாக கிடைத்த தகவலுக்கமைய நாரஹென்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ட்ரோனுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த ட்ரான் கமரா நிறுத்தாமல் பம்பலப்பிட்டியை நோக்கி பறந்துள்ளது.

கமராவை மீட்க பொலிஸார் கடும் முயற்சி செய்த போதும், அது கடலை நோக்கி பயணித்துள்ளது.

இது தொடர்பில் கடற்படையினருக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து ட்ரோன் கமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களில் பெருமளவு ட்ரோன் கமராக்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like