நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சுவிஸ் எயார் விமானத்தில் ஒரேயொரு பயணி மாத்திரமே பயணம் செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விமான இருக்கைகளை பதிவு செய்திருந்த பெரும்பாலானவர்கள், அவற்றை இரத்து செய்து விட்டன. ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 16 நாடுகள் இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இலங்கைக்கு வரும் சுற்றுலப்பயணிகளின் எண்ணிக்கையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், அரசாங்கம் இதனால் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.






