மன்னார் பிரதேசசபைக்கு உட்பட்ட தாழ்வுபாடு மற்றும் கீரி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பரிசோதனை நடவடிக்கைகளின் போது 25ற்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசி வைத்திருந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்
மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பான இராணுவ நடவடிக்கையானது நேற்றைய தினம் தாழ்வுபாடு மற்றும் கீரி கிராமங்களில் இடம் பெற்றது.
குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது வீடுகள் மற்றும் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டன.
தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளின் போது 25ற்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள் வைத்திருந்ததன் அடிப்படையில் குறித்த கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பாகவும் கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.







