இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியா தரணிக்குளம் பத்தாம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் கிணற்றுக்கருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய ராஜகுமாரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்பட்டுள்ளார்.
தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசாரனை அதிகாரி கருணாநிதி ஹரிபிராசாத் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்






