இன்னும் சில காலங்களில் யாழ் மக்கள் எதிர்நோக்க போகும் அவலம்

இன்னும் சில காலங்களில் யாழ் மக்கள் எதிர்நோக்க போகும் அவலம்

பூமி வெப்பமடைவது அதிகரித்து வருவதன் காரணமாக இன்னும் 50 வருடங்களில் யாழ் குடாநாடு பாதி பாலைவன பிரதேசமாக மாறிவிடலாம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாயகத்தை கேட்டு கோஷமிடுவதற்கு முன்னர் தமது நிலத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை வழிமுறைகள் மூலமாக அபிவிருத்தி செய்து, அதன் சுற்றாடலை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் நகர பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவது சம்பந்தமாக விளக்குவதற்காக இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

சரியான சுற்றாடல் ஆய்வுகள் இன்றி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக அனர்த்த நிலைமைகள் அதிகரித்துள்ளன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அனர்த்தம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

மேலும் அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் எச்சரிக்கை விடுக்க முடியாமல் இருப்பது பாரிய பிரச்சினை.

மக்களின் பாதுகாப்புக்காக நிரந்தர மக்கள் நிலையம் உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைப்பதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.