இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக தனியார் கத்தோலிக்கப் பாடசாலைகளை எதிர்வரும் 14ஆம் திகதி திறக்க கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் தீர்மானித்துள்ளது என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.






