லண்டன் மெட்ரோ வங்கி முன்பாகத் திரளும் தமிழர்கள்! எந்தப் பிரச்சனையும் இல்லை என்கின்றது நிர்வாகம்!!

லண்டனில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் ‘ஹரோ ஒன்த ஹில்’ பிராந்தியத்தில் உள்ள ‘மெட்ரோ வங்கி’ வங்குறோத்து நிலையை அடைந்துவிட்டதாகவும், அந்த வங்கியில் பாதுகாப்பு வைப்பிலிடப்பட்டிருக்கும் பொருட்களை இனிமேல் எடுக்கமுடியாது என்பதான வதந்திகள் சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பரவியதைத் தொடர்ந்து, இன்று நூற்றுக் கணக்கான மக்கள், குறிப்பாக தமிழர்கள் வாங்கிக்கு முன்பாக திரன்டிருந்தார்கள்.

தாம் பாதுகாப்பு பெட்டிகளில் வைப்பிலிட்ட நகைகள், ஆவணங்களை எடுப்பதில் நூற்றுக்கணக்கான தமிழ்கள் முண்டியடிப்பதை அங்கு காணக்கூடியதாக இருந்தது.

இது தொடர்பாக அந்த வங்கியைத் தொடர்புகொண்டபோது, அதுவெறும் வதந்தி என்றும், மிகவும் லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தமது வங்கி மீது அபாண்டமான குற்றச்சாட்டை யாரோ வேண்டுமென்றே பரப்பிவருவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.