குருநாகல் பகுதியில் தொடரும் பதற்றம்! படையினர் – பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

குருநாகல் – ஹெட்டிபொல நகரில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்றநிலையை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் உடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் அங்கு ஒரு சில குழுக்களினால் கடைகள் பொது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதை அடுத்ததே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு படையினர் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அங்கு மாலை 2 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்தும் சில பகுதிகளில் உள்ள கடைகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்முறையால் கொழுந்து விட்டெரிகிறது குருணாகல்….தொடரும் பதற்றம்

குருணாகல் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்றிரவு முதல் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் சிறிய பள்ளிவாசல்கள் இரண்டின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இன்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தமாக அந்த பகுதியில் ஆறு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது.

குருணாகல், குளியாப்பிட்டிய, கினியகம பகுதிகளில் முதலில் வன்முறை சம்பவங்கள் பதிவாகின. குளியாப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை வன்முறை கும்பல் சேதப்படுத்தியதை தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுவிக்ககோரி, பொலிஸ் நிலையத்தின் முன்பாக பெருமளவானவர்கள் குவிந்ததை தொடர்ந்து பதற்றம் நிலவியது.

காலையிலிருந்து இந்த பகுதிளில் இராணுவம், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்த போதும், வன்முறை கும்பல் அடாவடியில் ஈடுபட்டது.

சில இடங்களில் மின்சார தடையும் ஏற்படுத்தப்பட்டது. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன. வர்த்தக நிலையங்கள் தீவைக்கப்பட்டன