தந்தையின் உழவு இயந்திரத்துள் சிக்குண்டு 6 வயது சிறுவன் பலி!

கிளிநொச்சி – கோவில் பகுதியில் தந்தையின் உழவு இயந்திரத்தை ஓட்டிப்பார்க்க ஆசைப்பட்ட 6 வயது சிறுவன் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பற்றி சிறுவனின் உறவினர்கள் கூறியதாவது,

தந்தை வயலுக்கு சென்று விட்டு வீட்டில் உழவு இயந்திரத்தை திறப்புடன் நிறுத்தி வைத்து உணவருந்திக் கொண்டிருந்துள்ளார். அந்தச் சமயம் குறித்த சிறுவன் உழவியந்திரத்தில் ஏறி அதனை இயக்கியுள்ளார்.

இதனால் உழவியந்திரம் நகரத்தொடங்கி அருகில் உள்ள மரத்துடன் மோதியபோது குறித்த சிறுவன் தவறி வீழ்ந்து சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் விசேட தேவையுடைய மாணவன் எனவும் வகுப்பில் மிகவும் துடிப்புள்ள மாணவனாக இருந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like