பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீமானின் கட்சி படுதோல்வி

மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதனிடையில் சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் விஜயகாந்தின் தேமுதிக ஆகிய நான்கு கட்சிகளும் தற்போது வரை எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.

இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் பிரசாரம் பலரை ஈர்த்த நிலையிலும் அவர் கட்சி வேட்பாளர்கள் பின் தங்கியே உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி காஞ்சிபுரம், தென் காசி தொகுதிகளில் நாம்தமிழர் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதே போல டிடிவி தினகரன், கமல்ஹாசனின் பிரசாரங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் கட்சி வேட்பாளர்களும் பின் தங்கியே உள்ளனர்.

தேமுதிகாவும் தான் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் பின்னிடைவை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் ஜெயித்தாலே போதும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்த் பேசாததும், விஜயகாந்த் மகன் பேசியதும்தான் நிலைமை சீர்கெட்டதற்கு காரணம் என கூறப்படுகிறது.

மேலும், பிரேமலதாவின் உளறல், சர்ச்சை பேச்சினையும், சில பிரச்சாரங்களில் வேனை விட்டு கீழே கூட இறங்காததும் கூட மக்களை யோசிக்க வைத்திருக்கலாம் என சமூகவலைதளங்களில் பேசப்படுகிறது.