மண்ணை கவ்வினார் மோடி.. ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் பலத்த அடி

இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மோடி இரண்டாவது முறையாக பிரதமராக அரியணையில் அமரவுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவையே புரட்டிப்போட்ட பாஜக, தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா மற்றும் கேரளாவில் ஒரு தொகுயில் கூட முன்னிலையில் இல்லை. 25 மக்களவை தொகுதிகள் கொண்ட ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை.

அதே சமயம், ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. எதிர்வரும் மே 30ம் திகதி ஜெகன் மோகம் ரெட்டி ஆந்திரா முதல்வராக பதிவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே போல் 20 தொகுதிகள் கொண்ட கேரளாவில், காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை.

40 மக்களவை தொகுதிகள் கொண்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும், பாஜக வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளாவில், பாஜக கர்நாடகாவில் மட்டுமே கடந்த தேர்தலை விட கூடதலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

எனினும், வட இந்தியாவில் முழு ஆதிக்கம் செலுத்தியுள்ள மோடியின் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.