4 ஆயிரம் சிங்கள பெளத்த தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதா?

சிங்கள – பெளத்த தாய்மார் 4000 இற்கும் அதிகமானோருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததாக கூறப்படும் தெளஹீத் ஜமாத் எனும் பயங்கரவாத அமைப்பின் பிரபல வைத்தியர் ஒருவரைக் கைதுசெய்ய விஷேட பொலிஸ் குழுவினர் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறி சிங்கள தேசிய பத்திரிகையொன்றில் வெளியிட்ட தலைப்புச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

குறித்த செய்தியில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் உண்மைத்தன்மை அற்றவை எனக் கூறிய பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர, அத்தகையதொரு பொய்யான செய்தியை பிரசுரித்தமை தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like