முகத்தை மூடியவாறு ஆடை அணியும் ஆசிரியர்கள் தொடர்பில் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவுறுத்தல் அனுப்பிவைப்பு

ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பாடசாலைகளுக்கு முகத்தை மூடியவாறு சமுகமளிக்கும் போது கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சினால் விளக்கக் கடிதம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து புரியாததன் காரணமாக முகத்தை மூடிய வகையில் சில நபர்கள் பாடசாலைக்கு வருதல் அதே போன்று சில ஆசிரியர்கள் முகத்தை மூடிய வண்ணம் உடை அணிந்துக் கொண்டு வந்ததன் காரணமாக கடந்த சில தினங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்த நிலமை தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்திய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இந்த சம்பவங்களின் பாடசாலை அதிபர்கள் தலையிட வேண்டிய முறை மற்றும் பாடசாலைக்கு பிரவேசிக்கும் பொழுது முகத்தை மூடிய வண்ணமான ஆடை மற்றும் பாதுகாப்பு கவசம் அணிவது தொடர்பில் கட்டளைகள் அடங்கிய சிறப்பு எழுத்துமூல ஆவணம் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முழுமையாக முகத்ததை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட வதிகளின கீழ் வெளியிடப்பட்டுள்ள அரசின் அதி சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படும் கட்டளைகளுக்கு அமைவாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு முகத்தை மூடுவது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையுடன் கல்வி அமைச்சரின் ஆலாசனைக்கு அமைவாக இந்த எழுத்துமூல ஆவணம் கல்வி அமைச்சின் செயலாளரினால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – என்றுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like