தமிழர்களின் தலைநகரில் மிக முக்கிய வராலாறு சீரழிகின்றது

திருகோணமலையில் அமைந்துள்ள, கன்னியா வெந்நீர் ஊற்று தமிழர்களை பொறுத்த வரை வராலற்றை சொல்லும் மிக முக்கிய அடையாளம்.

யுத்த முடிவின் பின்னர் கன்னியா பௌத்த மத அடையாளமாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டு இருக்கிறது.

இது கூட ஆபத்தத்தானது தான் .ஆனால் இதையும் கடந்து செல்வோம் என்று மனத்தை தேற்றினாலும் ஆக குறைந்தது அந்த இடத்தின் புனித தன்மையாவது காப்பாற்றப்படவேண்டும்.

கன்னியா வெந்நீர் ஊற்று இயற்க்கையாக உருவாகி இருந்தாலும் அமானுஷ்ய மனிதர்களால் உருவாக்கப்ட்டு இருந்தாலும் அது ஒரு அதிசயமே.

வருட கணக்காக ,நூற்றாண்டுகளாக வற்றாதவெந்நீர் ஊற்றாக இருக்கிறது.அதுவும் அருகருகே வெவ்வேறு வெப்பநிலை வித்தியாசத்தில் நீரை கொண்டு இருக்கிறது.
உலகில் பல பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகள் இருந்தாலும் அவை அமிலம் அல்லது காரம் சார்ந்ததாகவே இருக்கிறது.ஆனால் கன்னியா ஊற்று கிணறுகள் நடுநிலை ஆனவை.

தொல்பொருட் தினைக்களம் இதை கையகப்படுத்தி பௌத்த தலமாகவும் சுற்றுலா தலமாகவும் நடத்துகின்றது.

ஆனால், இது மிக முக்கிய தொல்லியல் பகுதி என கருதி அதற்கான பாதுகாப்புகளை செய்து இருக்கின்றதா ? என்பது கேள்விகுறியே.

கிணற்றினுள் உள்ளே இறங்குதல்,சவர்காரம் போன்றவற்றை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை கண்டிப்பாக ஏற்று கொள்ள முடியாது .அனுமதிக்க முடியாது.

இவ்வாறு, அனுபதிக்க படுவதில் இருந்து இதை தொல்லியல் நோக்கத்துக்காக கையகப்படுத்தவில்லை ,தமிழர் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்னும் நோக்கில் தான் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று புலனாகின்றது.