திருகோணமலையில் இன்று மர்மநபர்கள் அட்டகாசம்! பெறுமதியான உடமைகள் தீக்கிரை

திருகோணமலையில் இனந்தெரியாத நபர்களால் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை ஜின்னா புரம் கடற்கரையில் இந்த அனர்த்தம் சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடலுக்கு கொண்டு செல்லும் மீன்பிடி படகுகள் 3 மற்றும் 40 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரகள் முற்றாக தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளன.

ஒரு ஏழையின் உபகரணங்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது, கடன் பெற்றே இந்த உபகரணங்களை வாங்யுள்ளதாகவும் படகின் சொந்தக்காரர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட படகுகளே இவ்வாறு தீ வைத்து நாசம் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த அனர்த்தம் மக்களை பெரும் அச்சப்பட வைத்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like