வெளிநாட்டிலிருந்து வந்த தமிழ் உறவு! கொழும்பு சென்று வீடு திரும்பிய வவுனியா திரும்பியோருக்கு வழியில் நடந்த சோகம்

கட்டுநாயக்க விமான நிலையம் சென்று, வவுனியா நோக்கி பயணித்த வான், நொச்சியாகம பகுதியில்

விபத்துக்குள்ளாகியது. அதில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுப்பாட்டை இழந்த வான் பாலத்துடன் மோதி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது,

வவுனியா தவசிகுளம் பாலவிநாயகர் கோவிலடியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.