யாழில் வீடொன்றை முற்றுகையிட்ட படையினரிற்கு காத்திருந்த பயங்கரம்

யாழ்ப்பாணம் சுவாமியார் வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 7 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின்போதே இவ்வாறு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வீட்டை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் படையினரிற்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் தொடர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக படைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.