இலங்கை தொடர்பில் இன்று வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் முன்கூட்டியே அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தமை உறுதியாகி உள்ளது.

தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ், பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவுக்கு அறிவித்திருந்த கடிதம் இன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 21ம் திகதி தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தவுள்ளதாக முன்னரே அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் திகதி தேசிய புலனாய்வுத்துறையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் நேற்று ஆஜரான தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சாட்சியம் அளித்திருந்தார்.

இதன்போது பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து முன்னதாக எழுத்துமூலம் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு முன்னரே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த கடிதம் வெளியாகி ஒட்டுமொத்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை தாக்குதல் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் தனக்கு கிடைக்கவில்லையென மீண்டும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 21ம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக 225 பேர் கொல்லப்பட்டும், 400 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.