நாளையுடன் அமைச்சர் பதவியை இழக்கிறார் ரிசாத்? அடுத்து என்ன நடக்கும்?

இந்தியாவிலிரு்தபடியே, இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர் ரிசாத்தின் பதவி விலகல் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரி ஈடுபட்டுள்ளார்.

ரிசாட்டை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன் போது பிரதமரிடம் தெளிவு படுத்தியுள்ளார்.

அதனை முழுமையாக பிரதமரும் ஏற்றதுடன் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் தொலைபேசி உரையாடலையடுத்து இன்று முற்பகல் அமைச்சர் ரிசாத்துடன் பிரதமர் ரணில் அலரி மாளிகையில் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

நாளை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீன், தற்காலிகமாக பதவிவிலகுமாறு ஜனாதிபதியால் கோரப்படவுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அடுத்த ஓரிரு நாட்களில் பதவிவிலகலாம் என கூறப்படுகிறது.

நாளை காலையில் அமைச்சர் ரிசாட்டை நேரில் அழைத்து, அமைச்சு பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதியால் கோரப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. .

இவ் விடயத்தில் சில நாட்களில் ரிசாட் பதியுதீன் பதவிவிலகும் நிலைமையேற்படுமென தெரிகிறது.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் , ஆளுனர்கள் அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி, அத்துரலிய ரத்ன தேரர் எம்.பி உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த பின்னர் உருவாகியுள்ள நிலைமையிலேயே, ரிசாட் பதியுதீன் பதவிவிலகும் நிலைமையேற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோரினால் தான் பதவிவிலக தயாராக இருப்பதாக ஏற்கனவே ரிசாட் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதம் அரசுக்கு எதிரான அதிருப்தியை மக்கள் மத்தியில் அதிகரிக்கலாம் என மைத்திரி தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழு விசாரணைகளின் பின், அதில் குற்றவாளியாக நிரூபிக்கப்படாத பட்சத்தில் மீளவும் பதவியேற்கலாம், தற்போதைய சர்ச்சையை தற்காலிகமாக முடித்து வைக்க பதவி துறப்பதே சரியென மைத்திரி அறிவுரை கூறியுள்ளார்.

ரணிலும் கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், நாளை ரிசாட் பதவி விலகல் கடிதத்தை கையளிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஜனாதிபதி செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.