அரசாங்க நிறுவனங்களில் பெண்கள் அணியும் ஆடை தொடர்பில் பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பெண் உத்தியோகத்தர்கள் இனிமேல் சாரி அல்லது ஒஸரி மட்டுமே அணிந்து சேவைக்கு சமூகமளிக்க முடியும்.
அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் ஜீன்ஸ் மற்றும் சேர்ட் அணிந்திருக்க வேண்டும்.
பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்திருத்தல் வேண்டும் என குறித்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமய ரீதியான உடைகளை அணிய விரும்புவோர் முகத்தை மூடாத வகையில் ஆடைகளை அணிய வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.







