கிளிநொச்சியில் சற்றுமுன்னர் கோர விபத்து : இரு இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

கிளிநொச்சியில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுகண்டியை அண்மித்த ஏ-9 வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முறுகண்டியை அண்மித்துள்ள செல்வபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிறுத்தும் இடத்தை விடுத்து வேறு இடத்தில் பயணிகளை இறக்கும்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் தனியார் ஆடைத் தொழிற்சாலையில், வேலைசெய்யும் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.