ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பேன்? திடமான முடிவை அறிவித்தார் மைத்திரி..

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இப்போது தன்னிடம் இல்லையென்றும், ஐ.தே.க நல்லதொரு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்தால் தான் அவரை ஆதரிப்பேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மற்றும் ஐ.தே.க பிரமுகர்கள் முன்னிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை, எதிர்கால அரசியல் பற்றியும் ஜனாதிபதி நீண்டநேரம் பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போதே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்ததாக, மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.