இலங்கையின் முஸ்லீம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சர் பதவியை துறந்தமையை கொண்டாடும் முகமாக செக்கட்டிபிலவு கிராம இளைஞர்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளின் பின்னர் மத்திய அரசியல் பங்கேற்றுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மேல் மாகாண ஆளுனர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் பதவி விலக வேண்டுமென தெரிவித்து நாட்டில் பல போராட்டங்கள் இடம்பெற்றிருந்தது.

இந் நிலையில் நேற்றைய தினம் அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகினர்.
இந்நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலகியதை, அவரால் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமமான சாளம்பைக்குளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தமிழ் கிராமமான செக்கடிப்புலவு கிராமத்து இளைஞர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.






