சற்றுமுன் களமிறங்கினார் ரிஷாட்; விமலுக்கு எதிரான உடனடி நகர்வு!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவுக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்கிறது.

கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றே பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்கிறது.

இதுதொடர்பான அறிவிப்பு ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை தனது ருவிற்றர் தளத்தில் தெரியப்படுத்தியிருந்தார்.

ஆரம்பத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தான் இந்த முறைப்பாட்டைப் பதிவுசெய்யப்போவதாக ரிஷாட் குறிப்பிட்டாலும் பின்னர் அதில் திருத்தங்கள் மேற்கொண்டு, குறித்த முறைப்பாடு குற்றப்புலனாய்வுத் துறையிடம் அல்ல, பொலிஸ் தலைமையகத்திடமே பதிவு செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், விமல் வீரவன்ஸ அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான போலிக் கருத்துக்களைப் பகிர்ந்துவருவது ஆபத்தான ஒரு அரசியல் நகர்வுக்கு இட்டுச்செல்வதாக ரிஷாட் சுட்டிக்காட்டியிருக்கிறார்.