இலங்கையில் முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் எம்மை இலகுவாக அடக்கி ஒடுக்கி விட முடியும் என யாரும் நினைத்துவிடக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாங்கள் இந்த நாட்டில் மட்டும் தான் சிறுபான்மை. ஆனால் உலகளவில் நாம் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாக அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறோம் எனவும் மிகவும் ஆணித்தரமாக தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒட்டு மொத்த முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியமை பெரிதல்ல ஆனால் ரவூவ் ஹக்கீம் கபீர் காசிம் ஆகியோர் பதவி விலகியமையே பாரிய விடயம் அவர்கள் எமத சமூகமன்றி சிங்கள மக்களின் வாக்குகளையும் பெற்றே வெற்றியீட்டியவர்கள்.
அவர்கள் எங்களுக்காகவும் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களுக்காகவும் பதவி விலகினார்கள். ஆகவே எங்களுடைய ஒற்றுமை என்பது சாதாரண விடயமல்ல. நான் ஜனாதிபதி மைத்திரிக்கு 2 வார கால அவகாசம் கொடுத்துள்ளேன் என் மீதான குற்றச்சாட்டுக்களை உடனடியாக விசாரணை செய்து நிரூபிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தமை தொடர்பில் கீழுள்ள காணொளி மூலம் காணலாம்.






