உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக முடித்த பின் மீண்டும் களத்தில் இறங்கியுள்ள ரத்ன தேரர்

முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசீம் ஆகியோர் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற போதும், முஸ்லிம் பயங்கரவாதத்திற்கு துணைபோவதாக உண்ணாவிரதமிருந்து நாட்டில் அசாதாரண நிலையை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்து பீட மஹாநாயக்க தேரரை சந்திக்கச் சென்ற போது ரத்ன தேரர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஆதரவு தெரிவித்த ஏனைய முன்னாள் அமைச்சர்களும் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்பது உறுதியாகி உள்ளது.

பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிசாத் பதியூதினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது அமைச்சு பதவிகளிலிருந்து கபீர் ஹசீம் மற்றும் ரவூப் ஹக்கீம் விலகி இருந்தனர். இதன்மூலம் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கபீர் ஹசிமிற்கு முஸ்லிம் மக்களை விட சிங்கள மக்களே அதிகமாக வாக்களித்துள்ளனர்.

ஹிஸ்புல்லாஹ், ரிசாத், அசாத் சாலி ஆகியோர் செய்த காரியங்களை கபீர் ஹசீம் போன்றவர்கள் உட்பட அனுமதித்துள்ளனர்.

கேகாலை மக்கள் கபீருக்கு இனிவரும் காலங்களில் நல்ல படிப்பினையை வழங்குவார்கள் என நான் நினைக்கிறேன்.

ஹக்கீம் எங்களுடன் இணைந்திருப்பார் என்றே நினைத்தேன். அவர் மத்தியஸ்தர் என நினைத்தேன். எனினும் அவரும் முழுமையாக பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களுடனேயே இருக்கின்றார்.

இனி வரும் காலங்களில் முஸ்லிம் மக்கள் தங்களுக்கு சரியான ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என நான் நம்புகின்றேன்” என ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.