ஆழ்ந்த நித்திரையில் இருந்த கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவி!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் தனது கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவியை வட்டவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவம் 09.06.2019 இரவு 01 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கணவன் மதுபோதையில் இருந்த வேளையில் இரவு ஒரு மணி அளவில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த கணவனை இரும்பால் தலைப்பகுதியில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகளுக்காக ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவளைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதன் பின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக வட்டவலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு கொலை செய்யபட்ட நபர் 44 வயதுடைய ஆறுமுகன் ஜெயராமன் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like