ஹிஸ்புல்லா மனைவியுடன் இணைந்து செய்த பல கோடி ரூபாய் மோசடியும் அம்பலமானது

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் – கிழக்கு மாகாண அரசியலில் குறிப்பாக காத்தான்குடியினை மையப்படுத்தி அரசியலில் ஈடுபடும் இவர் கட்சித்தாவல்களுப் பெயர் போனவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் தமது அரசியலை ஆரம்பித்த இவர், முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினராவார்.

பின்னர் சந்திரிக்கா ஜனாதிபதி அவர்களின் காலத்தில் பிரதி தபால் மற்றும் தொலைத்தொடர்புப் பிரதி அமைச்சராக இருந்ததுடன், முஸ்லிம் காங்கிரசுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பொருட்டு தேசிய ஐக்கிய முன்னணியுடன் இணைந்து அதன் உப தலைவராச் செயற்பட்டார்.

அடுத்த தேர்தலின் மூலம் பாராளுமன்றம் செல்லத் தவறியமையை அடுத்து, சந்திரிக்கா ஜனாதிபதினால் நீர்ப்பாசன சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மீண்டும் 2004ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், தோல்வியைத் தழுவினார்.

அதனை அடுத்து விமான நிலையங்கள் மற்றும் வான் வழிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது மனைவியுடன் இணைந்து பல கோடி ரூபாய் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக பல்வேறு ஆதாரங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக இவரது மனைவி 4 நிறுவனக்களின் தலைமைப் பதவியில் இருந்ததாகவும், அவர் மூலம் பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் அக்காலத்தில் பல்வேறு தரவுகளுடன் சான்றுகளுடன் வெளிவந்தன.

இக்கட்டுரைக்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லாதபடியினால் அவற்றை இதனுடன் இணைக்கவில்லை. தேவையுள்ளவர்கள் தொடர்பு கொண்டால் அவற்றினை என்னால் வழங்க முடியும்.

அத்துடன் காத்தான்குடியின் ஒருகாலத்தின் பிரதான பேசுபொருளாக கர்பலா பிரச்சனை திகழ்ந்தது. ஏழை முஸ்லிம்கள் பலருக்கு சொந்தமான ஏக்கர் கணக்கான கடற்கரை காணியை ஹிஸ்புல்லாஹ் தன்னுடைய பினாமி பெயரில் கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும், 2004 சுனாமிக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடம் எனவும் அந்த மக்களுக்கு எங்கே போயும் காணியை மீட்க முடியவில்லை என்றும் பலர் என்னிடம் நேரில் குறிப்பிட்டிருந்தார்கள்.

தேசிய அரசியலில் இருந்து மீண்டும் முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்து சில காலம் உறுப்புரிமை வகித்த இவர், பின்னர் பசில் ராஜபக்சவுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் திடீரென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பில் இணைந்து, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார்.

குறித்த தேர்தல் காலங்களில் இவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பறை சாற்றினாலும், பின்னர் அப்பதவி பிள்ளையாணிற்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

அத்தேர்தலின் மூலம் மாகாண சபை சென்ற இவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகக் கடமையாற்றியதுடன், பின்னர் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அவர்களின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றார். அமைச்சுப் பதவியும் வகித்தார்.

அடுத்த 2015ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதி தீவிர மஹிந்தவாதியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட இவர் தோல்வியைத் தழுவினார். அக்காலப்பகுதியில் இவர் தன்னை ஒரு தமிழ் இந்து விரோத இனவாதியாகப் பிரச்சாரம் செய்தமை பலராலும் விமர்சிக்கப்பட்டது.

பின்னர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றவுடன் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று ராஜாங்க அமைச்சுப் பதவியையும் வகித்தார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தழுவினார்.

கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், காத்தான்குடியில் இவரது வழி நடத்தலின் கீழ் கை சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்து வட்டாரங்களையும் வென்றதுடன், ஜனாதிபதி மைத்திரியின் சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தியமை குறிப்பிடத்தகதாகும்.

இந்த நியமனங்கள் என்ன சொல்ல வருகின்றன ?

பலர் பல்வேறு கோணங்களில் இந்நியமனங்க்களைக் குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் நியமனம் தொடர்பாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்து வரும் அதே வேளையில், நாம் இதன் உண்மைப் பின்னணி யாதென்று மக்களுக்குக்கு அறியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

நாம் இந்த ஒவ்வொரு புதிய ஆளுநர்களையும் எடுத்துப் பார்த்தோம் என்றால், எந்த ஒரு வகையில் சரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கோ நேரடித் தொடர்புடையவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அரசாங்கத்தில் தனது கட்சி அங்கம் வகிக்காமையைத் தொடர்ந்து மைத்திரி கையில் எடுத்திருக்கும் புதிய ஆயுதமே இந்த ஆளுநர் நியமனங்கள்.

குறிப்பாக நியமித்த திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை எதிர்பார்க்கும் பட்சத்தில் மைத்திரி தனது அன்றாடம் நலிவடைந்துவரும் முகாமைப் பலப்படுத்த நினைக்கின்றார். மாகாண சபைகள் கலைக்கப்பட்டும், உள்ளூர் ஆட்சி சபைகளுள் பாரிய வீழ்ச்சிகளையும் கண்ட மைத்திரி, தற்போது எதிர்நோக்கும் பிரச்சனை அவரது கட்சிக்கு அமைச்சுப்பதவிகள் இல்லாமையே. அதனை ஓரளவேண்டும் நிவர்த்தி செய்ய பாவித்துள்ள ஆயுதங்களே இந்த ஆளுநர்கள்.

அதாவது தேர்தல் இலக்கை மையப்படுத்திய ஆளுநர் நியமனங்களே இவை. இலங்கையில் இதற்கான தேவை இதுவரை காலமும் பாரிய அளவில் காணப்படவில்லை. மாகாணங்களில் ஆளுநர் ஆட்சிகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இவர்கள் மூலம் அதி உச்ச பயனைப் பெற நினைக்கின்றார்.

அத்துடன் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றவர். தற்போதோ அவரிடம் அமைச்சுப் பதவி இல்லை. இவரைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோவொரு அரசாங்கப் பதவியை வகித்துள்ளார்.

ஆகவே இவரை மைத்திரி தன்னுடன் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பாவித்துள்ள ஒரு உத்தியாகவும் இது இருக்கலாம். அத்துடன் இவரது வெற்றிடம் மூலம் தனது பிரச்சாரத்தை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளக் கூடிய சாந்த பண்டாரவை நியமித்துள்ளார்.

ஆகவே இங்கு நாம் ஒன்றை மாத்திரம் விளக்கமாகப் புரிந்து கொள்ளல் வேண்டும். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஒரு இனவாதியாக இருக்கலாம். அதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.

அது போன்று கிழக்கிலங்கையில் இதுவரை…..

அரசியலில் யார் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம்…


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like