மாத்தறையில் நடந்த பயங்கரம்! பயணிகளுடன் இயந்திர துப்பாகியுடன் பயணித்த பேருந்து சாரதி

மாத்தறையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

தெனியாய செல்லவகந்த வீதியில் பயணித்த தனியார் பேருந்தில் துப்பாக்கியுடன் பயணித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஒருதொகுதி கஞ்சா மற்றும் இதுவரை பயன்படுத்தாத வெள்ளை நிறத்திலான தூள் வகை ஒரு தொகையும் குறித்த பேருந்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த பேருந்தின் சாரதி, நடத்துனர் ஆகிய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய அதிரடி படையினர் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தை நிறுத்தி பயணிகளை வெளியேற்றிவிட்டு சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது சாரதிக்கு சொந்தமான இயந்திர துப்பாக்கி மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்படாத அந்த தூளை சோதனையிடுவதற்காக அரச பகுப்பாய்வாளர்களிடம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்தில் தந்தை சாரதியாகவும் மகன் நடத்துனராகவும் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like