முருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் சடலம்

திருமுருகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வியாபார நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 8.30 மணி அளவில் வியாபார நிலையத்திற்கு முன்பாக குறித்த நபர் உயிரிழந்த நிலையில் இருப்பதை அவதானித்த வியாபாரிகள் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைககாக அனுப்பியதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்துபுரம், திருமுருகண்டியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய ஆறுமுகம் குமாரராஜா என்பவரே உயிரிழந்தவராவார்.

இயற்கையான மரணமா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதில் சந்தேகம் நிலவுவதால் பொலிசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like