நாட்டுகாக மிக பெரிய உதவி செய்தவரையே கைது செய்தது இந்த சிங்கள அரசு! வெளியாகும் உண்மைகள்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் அரசுக்கு பண உதவி செய்த மர்ஹூம் நளீம் ஹாஜியாரையே கைது செய்தது அன்றைய அரசாங்கம்.

1933.04.04ஆம் திகதி பேருவளையில் பிறந்த தனது செல்வத்தால் தனது சமூகத்தையும் தேசத்தையும் வளப்படுத்தியதன் மூலம் வரலாறு படைத்தவர்.

1970 இல் இலங்கை கூட்டுத்தாபனம் ஸ்தாபித்தவர்களின். பிரதான கர்த்தாவாக அமைந்தது நளீம் ஹாஜியார் ஏற்றுமதிக்கான முதலாவது கல்லை நளீம் ஹாஜியாரே வழங்கி வைத்தார். மற்றும் கூட்டுத்தாபனம் குறுகிய காலத்தில் பெறுமளவு இலாபத்தை ஈட்ட அவரது ஆலோசனை முக்கிய காரணமாக அமைந்தன.

974 ஆம் ஆண்டளவில் இலங்கை பொருளாதார நெருக்கடி நிலைக்கு முகம் கொடுத்த போது, நளீம் ஹாஜியார் தேசத்துக்கு உதவினார். 15 இலட்சம் ரூபா பெறுமதியான தனது வெளிநாட்டு செலாவணியை அவர் தாய்நாட்டுக்கு அன்பளிப்பு செய்தார்.

1974 அதே ஆண்டு டிசம்பரில் அவர் பாரிய சோதனையொன்றுக்கு முகம் கொடுத்தார். வெளிநாட்டுச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி 47 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

ஆனால் இறுதியில் அவர் நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டு விடுதலையானார். அவருக்கான நியாயத்தை வேண்டி அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்தன பாராளுமன்றத்தில் குரல்கொடுத்துப் பேசியிருந்தார்.

நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்த போது உதவி செய்தவரையே கைது செய்தது இந்த சிங்கள அரசு

கல்வித்துறை, விளையாட்டுத்துறை, தேசிய மட்டத்தில் செய்த பொதுநலப் பணிகளில் ‘சுசரித்த’ கட்டட அன்பளிப்பைக் குறிப்பிடலாம். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உள்ளூராட்சி அமைச்சராக இருந்த காலத்தில் இந்த நிகழ்வு நடந்தது.

நளீம் ஹாஜியார் செய்த பொதுப் பணிகள் விசாலமானவை. அதன் விளைவாக தேசிய மட்டத்தில் பல கௌரவப் பதவிகளும் பட்டங்களும் அவரைத் தேடி வந்த போதும் அவற்றை கண்ணியமான முறையில் புறக்கணித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like