மாணவனின் புத்தகப்பையிலிருந்த கொடிய விஷமுள்ள நாகபாம்பு?

தங்காலைப் பிரதேசத்தில் பிரபல பாடசாலையில் பயிலும் மாணவனின் புத்தக பையில் நாக பாம்பு இருந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், பாம்பு பாடசாலைக்கு வெளியே உள்ள காட்டில் விடப்பட்டுள்ளது.மாணவன் தனது உணவு பொதியை புத்தகப்பையில் இருந்து எடுக்க முயற்சித்த போது, பாம்பு கையில் பிடிப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மாணவன் உடனடியாக வகுப்பாசிரியருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

விரைந்து செயற்பட்ட ஆசிரியர், பையை மூடி அதனை வகுப்பறைக்கு வெளியில் எடுத்து சென்று பாடசாலையின் பாதுகாப்புக்கு இருந்த பெற்றோரிடம் வழங்கியுள்ளார்.

பெற்றோர் பையை சோதனையிட்ட போது, அதில் 3 அடி நீளமான நாக பாம்பு இருந்துள்ளது. அதனை அவர்கள் பாடசாலைக்கு வெளியே உள்ள காட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.

புத்தகப் பைக்குள் நாக பாம்பு எப்படிச் சென்றதென தெரியவில்லையென்று மாணவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.