யாழில் மாணவனின் கல்வியை இடைநிறுத்திய பாடசாலை நிர்வாகம்! காரணம் என்ன தெரியுமா?

யாழ்ப்பாணம் சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாத காரணத்தினால் மாணவனின் கல்வியை பாடசாலை நிர்வாகத்தினர் இடைநிறுத்தியிருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாது சாதாரண பையை கொண்டு சென்றுள்ளார்.

பாடசாலையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் மாணவனின் பாடசாலை பை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது கணாடி பை கொண்டுவரவில்லை என்பதற்காக பாடசாலை நிவாகத்தினர் மாணவனின் புத்தகங்களை வெளியில் எடுத்துவிட்டு, பையை வீசியுள்ளனர்.

அத்துடன் மாணவனின் தந்தையிடமும் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாடசாலைக்குச் சென்ற மாணவனின் தாயார் கண்ணாடி பை கொண்டு வர வேண்டும் என்றால் மாணவனின் விலகல் பத்திரத்தை தருமாறு அதிபரிடம் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் குறித்த பாடசாலையின் அதிபர் , ஆசிரியர் ஒருவரின் மூலம் மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தினால் மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக மாணவனின் பெற்றோர்கள் கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்தை விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.