ஹிஸ்புல்லா அந்தர் பல்டி

அரபு சுற்றுலா பயணிகளை ஈர்க்கவே அரபுமொழி பெயர்ப்பலகைகள் வைத்தோம்: தெரிவுக்குழு முன் ஹிஸ்புல்லாஹ்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக கிழக்கு முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சாட்சியமளித்து வருகிறார்.

முன்னதாக, பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்ணசிறி இன்று மாலை சாட்சியம் வழங்கினார்.

அரச உத்தியோகத்தர்களுக்கான ஆடை விவகாரம் தொடர்பில் வௌியிடப்பட்ட சர்ச்சைக்குறிய சுற்றறிக்கை சம்பந்தமாகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது சாட்சியம் வழங்கும் ஹிஸ்புல்லாஹிடம் காத்தான்குடியில் நாட்டப்பட்டுள்ள அரபு மொழி பெயர்ப்பலகைகள் குறித்து வினவப்பட்டது.

அரபு நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கவே அந்த பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் ஹிஸ்புல்லா அந்தர் பல்டி அடித்துள்ளாக அரசில் நோக்கர்கள் கூறுகிறார்கள்…

Get real time updates directly on you device, subscribe now.

You might also like