முஸ்லிம் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு

கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது போன்ற பல சம்பவங்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும் இந்த தகவல்கள் அனைத்தையும் சேகரித்து விசாரணை அதிகாரிகளிடம் கையளிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பைசல் காசிம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் மூன்றாவது பிள்ளையை பெற்றெடுத்த பின்னர், உடல் சுகாதாரம் பலவீனமாக இருப்பதாக கூறி, இந்த குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

மகப்பேறு மருத்துவர்களுடன் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த தகவல் தெரியவந்தது எனவும் பைசல் காசிம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ளது.