யாழ் வந்த அத்துரலிய ரத்ன தேரர் காலில் விழுந்த மக்கள்

சர்ச்சைக்குரிய எம்.பி அத்துரலிய ரத்ன தேரர் இன்று நேற்று யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.

நாளை யாழில் நடக்கும் இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். காலை 11 மணிக்கு நாகவிகாரையில் நடைபெறும் பொசன் தின நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

பின்னர் சர்வமத கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இலங்கை வேந்தன் கல்லூரியில் நடக்கும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வார்.

இன்று இரவு வலம்புரி ஹோட்டலில் அத்துரலிய ரத்ன தேரர் தங்கியுள்ளார். தேரர் அங்கு வந்ததும், தொண்டர் ஆசரியர்கள் தேரரை சந்தித்து, தமது நிரந்தர நியமனம் குறித்து அக்கறை செலுத்தும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்கள் தேரரின் காலில் விழுந்து வணங்கி வரவேற்பு செலுத்தியிருந்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like