தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் யார்? ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது.

பிர­பா­க­ர­னு­டன் இஸ்­லா­மி­யப் பயங்­க­ர­வா­தி­களை ஒப்­பி­டு­வது அறி­வீ­னம். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முஸ்­லிம்­க­ளின் மத்­தி­யி­லி­ருந்து பிர­பா­க­ரன் உரு­வாக இட­ம­ளிக்க வேண்­டாம் எனத் தெரி­வித்­தி­ருப்­பது அபத்­த­மான ஒன்று.

இவ்­வாறு சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வ­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீம் தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய ஊட­க­மொன்­றுக்கு வழங்­கி­யுள்ள செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது..

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னுக்­கும் அவ­ரின் இயக்­கத்­தி­ன­ருக்­கும் எனப் பெரும் ஆத­ர­வுத் தள­மி­ருந்­தது.

இப்­போ­தும் இருக்­கின்­றது. அதே­வேளை, அவர்­க­ளுக்­கென்று கட்­ட­மைப்பு இருந்­தது. அர­சி­யல் கொள்கை இருந்­தது. அவர்­க­ளுக்­கென்று ஒரு விடு­த­லைப் போராட்­டம் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தது.

நோர்­வே­யின் ஏற்­பாட்­டில் சமா­தா­னப் பேச்­சுக் காலத்­தில் விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரனை கிளி­நொச்­சி­யில் நாம் நேரில் சந்­தித்­தோம்.

அவர் எனக்­கும் எனது கட்­சி­யி­ன­ருக்­கும் பலத்த வர­வேற்பு வழங்­கி­யி­ருந்­தார். சுமார் ஐந்து மணித்­தி­யா­லங்­கள் எங்­க­ளு­டன் அவர் மனம் விட்­டுப் பேசி­னார்.

துர­திஷடவ­ச­மாக அந்­தச் சமா­தா­னக் காலம் நீடிக்­க­வில்லை. மீண்­டும் போர் ஆரம்­ப­மா­னது. விடு­த­லைப்­பு­லி­க­ளின் தாக்­கு­தல்­கள் குறு­கிய நோக்­கத்­தில் இருந்­த­தில்லை.

உரி­மை­க­ளைக் கேட்டு நிற்­கும் தமிழ் மக்­கள் மீதான இரா­ணு­வத் தாக்­கு­தல்­க­ளுக்­குப் பதி­லடி கொடுக்­கும் வகை­யி­லேயே அவர்­க­ளின் தாக்­கு­தல்­கள் இருந்­தன.

பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. இந்­த­நி­லை­யில், பிர­பா­க­ர­னு­டன் இஸ்­லா­மி­யப் பயங்­க­ர­வா­தி­களை ஒப்­பி­டு­வது அறி­வீ­னம்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முஸ்­லிம்­க­ளின் மத்­தி­யி­லி­ருந்து ஒரு பிர­பா­க­ரன் உரு­வாக இட­ம­ளிக்க வேண்­டாம் எனத் தெரி­வித்­தி­ருப்­பது அபத்­த­மான ஒன்று.

இலங்­கை­யில் உயிர்த்த ஞாயி­றன்று தற்­கொ­லைக் குண்­டுத் தாக்­கு­தல்­களை நடத்­திய கும்­ப­லுக்­கென்று எது­வுமே கிடை­யாது.

இவர்­க­ளுக்கு முஸ்­லிம் சமூ­கத்­தி­ட­மி­ருந்து எந்த ஆத­ர­வும் கிடை­யாது. அப்­ப­டி­யான கும்­பல் பிர­பா­க­ரன் என்­கிற தகு­திக்கு வந்து விடு­வார்­கள் என்று அச்­சப்­ப­டு­கின்ற அதீ­த­மான அச்­சப்­போக்கு அபத்­த­மா­னது – என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

தமிழ் மக்­க­ளின் நியா­ய­மான அர­சி­யல் கோரிக்­கை­களை இலங்கை அரசு கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்ள வேண்­டும், என­வும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.