ஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்

நாவலப்பிட்டி கடுங்கஞ்சேன நகரத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் நேற்று இடம்பெற்றது.

இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்கான விஷேட பூஜைகள் இடம்பெற்று கொண்டிருந்த வேளை பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்த ஆறு பெண்கள் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்.

ஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்று கொண்டிருந்த வேளை பக்தர்களின் நெரிசல் அதிகமாக காணப்பட்டத்தை வாய்ப்பாக பயன்படுத்தி குறித்த பெண்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதை போல் நடித்து, தங்க சங்கிலியை அறுத்துள்ளனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்நிலையில் சங்கிலியை பறிகொடுத்த பெண்ணொருவர் கூச்சலிட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாவலப்பிட்டி பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

அதோடு, அறுக்கபட்ட தங்க சங்கிலியையும் நாவலப்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த ஆறு பெண்களும் ஆலயங்களில் விஷேட பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகங்கள் இடம்பெறும் பிரதேசங்களுக்கு குழுவாக சென்று களவாடும் சம்பவத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாழைச்சேனை, புத்தளம், ஆலாவத்த, வத்தேகம பகுதிகளை சேர்நதவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட ஆறு பெண்களும் இன்று நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like