நித்திலன் விபத்து – உண்மையில் நடந்தது என்ன – அதிர்ச்சியில் வைத்தியர்கள்

யாழில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியிருந்தார்.

இவர் கொக்குவில் கிழக்கு சேர்ச் லேனைச் சேர்ந்த தர்மானந்தசிவம் நித்திலன் (வயது-19) என்பவரே என்று அவரது தந்தை தர்மானந்தசிவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காட்டியிருந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், வேகக் கட்டுப்பாட்டையிழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினார் என்று இறப்பு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை தந்தையாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் தொடர்பாக மருத்துவர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் விபத்தின்போது படுகாயமடைந்திருந்த இளைஞனின் உடலினுள் இரத்த கசிவு இருந்த காரணத்தினால் உயிராபத்தை தடுப்பதற்காக அவரிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று செய்ய முற்பட்டதாகவும் இதன்போது அவரது வயிற்றை வெட்டி திறந்த போது உள்ளிருந்து கறுப்பு நிற திரவம் ஒன்று வெளியேறியதாகவும் தெரிவித்திருந்தார்.

பின்னர் அதனை சோதித்துப் பார்த்தபோது சமிபாட்டு தொகுதியின் முக்கிய அங்கங்கள், மற்றும் உள் உறுப்புக்கள் சிதறிக்கிடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நடந்தது என்ன?? குறித்த இளைஞன் மதிய உணவோடு சோடா பானம் அருந்தியுள்ளார்.

வீதியின் குறுக்கே சென்றவரை காப்பாற்றும் நோக்கில் விபத்திற்கு முகம்கொடுத்துள்ளார். நெஞ்சறை மற்றும் வயிற்று பகுதியில் மின்கம்பம் மோதியுள்ளது. இதனால் உணவுக்கால்வாய்க்குள் இருந்த காஸ் நிரம்பிய சோடா பானம் அமுக்கம் காரணமாக உள் அங்கங்களை வெடித்து சிதைவடைய வைத்துள்ளதுடன் வயிற்றுக்குழிக்குள்ளும் நிறைந்திருந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட அதிக குருதி இழப்பே இளைஞனின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என தெரியவந்துள்ளது.

எது எவ்வாறாயினும் குறித்த இளைஞனின் மரணம் வைத்தியசாலை வட்டாரங்களில் பாரிய அதிர்வலைகளை உண்டு பண்ணியிருந்துள்ளது.

சுமார் 7 மணித்தியாலங்களிற்கும் மேலாக குறித்த இளைஞனின் உயிரை எப்படியாவது காப்பாற்றி விடுவோம் என வைத்தியர்கள் , தாதியர்கள், ஏனைய உத்தியோகஸ்தர்கள் என எல்லோரும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தமையை அங்கே காணக்கூடியதாக இருந்தது என செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.