மின்சார சபை வாடிக்கையாளர்கள் இலகுவான சேவையைப் பெற மொபைல் அப் அறிமுகம்

இலங்கை மின்சார சபையின் வாடிக்கையாளர் சேவையை மேலும் செயற்றிறன் மிக்கதாக மாற்றுவதற்கு புதிய அதிதிறன் அலைபேசி செயலியை ( Smart Phone App) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தச் செயலி நாளை முதல் அன்ட்ரொய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளங்களில் தரவிறக்கம் செய்ய முடியும் என்று மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

CEB Care எனும் பெயரில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

“வாடிக்கையாளர்கள் தமது அதிதிறன் அலைபேசியில் CEB Care என்ற செயலியை, பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
மின்வெட்டு, முறைப்பாடுகளை முன்வைத்தல், மின் கட்டணம் தொடர்பிலான சேவைகளை இந்த செயலி ஊடாக வாடிக்கையாளர்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like