யாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்! காரணம் இது தானாம்..

உடுவில் அம்பலவாணர் வீதியை சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அயலவர்களால் அம்புலன்ஸில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சீதனமாக காணியொன்றை வழங்குமாறு கோரி மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்தச் சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

வயோதிபப் பெண்ணின் மகளின் கணவரே தாக்குதலை நடத்தியுள்ளார். அவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

“வயோதிபப் பெண்ணின் காணி ஒன்றை தமக்கு எழுதி வழங்குமாறு மருமகனான சந்தேகநபர் கேட்டுள்ளார்.

ஏற்கனவே சீதனமாக காணி ஒன்று வழங்கப்பட்டுள்ளதால், தன்னிடமுள்ள மற்றைய காணியை சிறப்புத் தேவையுடைய மகனுக்கு தேவை என்று மாமியார் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் காணியை எழுதி வழங்குமாறு மருமகன் இன்று மாமியாரைத் தாக்கியுள்ளார்” என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like