அதிகாலையில் ஐவரின் உயிர் போன கோர சம்பவம்! சாரதிக்கு ஏற்பட்ட நிலை

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாரதி கைது செய்யபபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வானின் சாரதியை பொலன்னறுவை நீதவான் ரங்க தனுஷ்க ரத்நாயக்க முன்னிலையில்ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அவரை அடுத்த மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

19ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளமைக்கு வானின் சாரதியின் கவனயீனமே காரணமென பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு – வெலிகந்த பகுதியில் மனம்பிட்டிய பகுதியிலிருந்து பயணித்த சிறிய ரக உழவு இயந்திம் வான் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது சிறிய ரக உழவு இயந்திரத்தில் பயணித்த 4 பெண்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், சிறிய ரக உழவு இயந்திரத்தில் பயணித்த மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில், பொலன்னறுவைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like