பெண் தற்கொலை தீவிரவாதி சார புலஸ்த்தினி எப்படி இஸ்லாம் மதத்திற்கு மாறினார்? பின்பு என்ன நடந்தது..?

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை நடாத்திய பயங்கரவாதி சாரா புலஸ்த்தினி தன்னுடைய சுய விருப்பத்தின் பெயரிலேயே இஸ்லாம் மதத்தை தழுவினார் என இலங்கை தௌஹீத் ஜமாத் தலைவர் அப்துல் ராசிக் கூறியுள்ளார்.

மேலும் கடுவாப்பிட்டி புனித செபஸ்த்தியார் ஆலயத்தில் தாக்குதல் நடாத்திய அஸ்துான் என்ற தீவிரவாதி தன்னை சந்தித்துள்ளதாகவும் அப்துல் ராசிக் இன்று கூறியிருக்கின்றார்.

தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்கும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அஸ்தூன் என்ற நபர் இருந்தார்.

அவர் 2015ஆம் ஆண்டு சாரா புலஸ்தினி என்ற தனது காதலியுடன் எமது அமைப்பின் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இஸ்லாம் சமயத்தை தழுவ வேண்டும் என்று கூறினார். சாரா புலஸ்தினிக்கு 18 வயது பூர்த்தியாகி இருந்ததால்,

இஸ்லாம் சமயத்தை தழுவ முடியும் என நாங்கள் கூறினோம்.தமக்கு தங்குமிடம் வழங்குமாறு அவர்கள் கேட்டனர். நாங்கள் அது முடியாது என்று கூறி, அவர்களின் பெற்றோரை தொடர்புக்கொண்டோம்.

தங்குமிடத்தை வழங்க முடியாது. திருமணம் செய்துக்கொண்டதால், பெண்ணுடன் தங்கியிருக்க தங்குமிட வசதிகளை வழங்க முடியாது என்று கூறினோம்.

இதன் பின்னர், பெண்ணின் தாயை தொடர்புக்கொண்டு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரியிடம் அனுப்பினோம்.

அவர்களின் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்தோம்.சாரா புலஸ்தினியை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவரது தாய் கூறினார்.

அழைத்துச் செல்லுங்கள் அது உங்களது விருப்பம் என்று நாங்கள் சொன்னோம். அதன் பின் சாரா புலஸ்தினியை அழைத்துச் சென்றனர். 5 நாட்களில் அனுப்புவதாக கூறினார்.

அனுப்ப வேண்டாம் வைத்துக்கொள்ளுங்கள் என்று நாங்கள் தெரிவித்தோம். இது அந்த பெண் 2015ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவியமைக்கான சான்றிதழ். அஸ்துன் மற்றும் சாரா புலஸ்தினியின் அடையாள அட்டைகள், புலஸ்தினிக்கு 19 வயது. ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பில் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார்.

சாரா இந்து சமயத்தை பின்பற்றும் தமிழ் பெண். ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளராக நான் பதவி வகிக்கும் போதே அவர்கள் வந்து, கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கைக்கு அமைய இணக்கத்தை பெற்றுக்கொண்டோம். அவர் 19வயதை பூர்த்தி செய்திருந்ததால், இஸ்லாத்தை தழுவ செய்தோம். தங்குமிடத்தை வழங்க முடியாது என்று நாங்களும் கூறினோம், அவரது தாயும் கூறினார். மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் ஊடாக பிரச்சினை தீர்த்துக்கொள்ளுமாறு 2015ஆம் ஆண்டு 8 மாதம் 5ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பினோம்.

இதன் பின்னர் அவர் வீட்டுக்கு சென்று 2015 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 24 ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியேறி, மீண்டும் அஸ்தூனுடன் 25 ஆம் திகதி எங்கள் அலுவலகத்திற்கு வந்து, தாய் என்னை சமய வழிபாடு செய்ய இடமளிக்கவில்லை என்னை இவருக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார்.

பொறுப்பாளர்கள் இருக்கும் போது எமக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறி, நாங்கள் தாயை சம்பந்தப்படுத்திக்கொண்டோம். தாய் எதிர்க்கின்றார். நீங்கள் செய்து வைக்காவிட்டாலும் நாங்கள் திருமணம் செய்துக்கொள்ள போகிறோம் என இவர்கள் கூறினார்கள்.

இதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 31 ஆம் திகதி புலஸ்தினி, அஸ்தூனை விவாகரத்து செய்துள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து எமது அமைப்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். நான் இஸ்லாம் சமயத்தில் இருந்தும் வெளியேறி விட்டேன்.

உங்கள் அமைப்பில் இருந்து விலகுகிறேன் என்று கடிதத்தில் கூறியிருந்தார். அந்த கடிதமும் எங்களிடம் உள்ளது. இந்த கடிதத்தின் மூலப் பிரதியை குற்றப் புலனாய்வு திணைக்களம் பெற்றுக்கொண்டது.

சாரா மாளிகாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைமையகத்தில் என்னை சந்தித்தார். அந்த தலைமையகத்தை நாங்கள் 2010 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம். அதற்கு முன்னர் தெமட்டகொடையில் இருந்தது எனவும் அப்துல் ராசிக் குறிப்பிட்டுள்ளார்.

you my like this video

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More