இலங்கையில் புதைக்கப்பட்ட சடலம் திடீர் மாயமானதால் பரபரப்பு!

நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து புதைக்கப்பட்ட நிலையில், 28 நாட்களுக்கு பின் குறித்த காணாமல் போயுள்ள சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிக்கவெஹெர பல்லேவெல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கலேவெல பொலிஸாருக்கு இன்று கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய விசாரணை மேற்கொண்ட போது கவேவெல பல்லேவெல பகுதியில் முஸ்லிம் மயானத்தில் கடந்த 28 நாட்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருந்த சடலமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

குறித்த சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ள அதே இடத்திற்கு அருகில் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு குழிகளும் தோண்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன குறித்த சடலம் முருங்கை பயிர் செய்யப்பட்டிருந்த பகுதியில் மண்ணால் மூடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மர்மான சடலம், கலேவெல – பல்லேவெல பகுதியை சேர்ந்த 50 வயதான ஹபிபி லெப்பை மன்சூர் என்பவரின் சடலம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சடலத்தை தோண்டி எடுத்தது யார்? எதற்காக தோண்டியெடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை.

எனினும் சடலம் தொடர்பில் மீளவும் நீதவான் நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சடலம் மீட்கப்பட்ட இடம் மற்றும் மயானத்திலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like