முஸ்லிம் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!

அரச அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கும் புதிய சுற்றுநிருபத்தை வெளியிட அமைச்சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை அடுத்து முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் அணி தடை விதிக்கப்பட்டது.

நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையினால் பல்வேறு நெருக்கடி நிலைகள் ஏற்பட்டிருந்தன.

இதன் காரணமாக பாடசாலைகள், அரச நிறுவனங்களில் பணி புரியும் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டதுடன், சிலர் தமது வேலைகளையும் ராஜினாமா செய்திருந்தனர்.

இந்நிலையில் அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கும் புதிய சுற்றுநிரூபத்தை வெளியிடுமாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.