இன்று மாலை களனி, நுங்கமுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னிலங்கையில் தொடர்ச்சியாக துப்பாக்கி பிரயோகங்கள் இடம் பெறுவதனால் அப்பகுதிகளில் பதற்றத்துடன் மக்கள் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.